அவதானம்: மண்சரிவு அபாய எச்சரிக்கை
பலத்த மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் […]









