செய்தி

இறுதி ஆட்டமே எனது இலக்கு: மனம் திறந்தார் சஞ்சு சாம்சன்!

“இறுதி ஆட்டத்திலும் சிறப்பாக ஆடினால்தான் எனது கடமை நிறைவேறும்.” என்று இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் Sanju Samson தெரிவித்தார்.

உலகக்கிண்ண தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தபோதும், இந்தியா முதலில் விளையாடிய 6 ஆட்டங்களில் 2-இல் மட்டுமே இவர் களமிறக்கப்பட்டார்.

மேற்படி இரு போட்டிகளில் 22, 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதிக்கு நிகரான ஆட்டத்தில் 97 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார் சாம்சன்,

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ஓட்டங்கள் அடித்து மீண்டும் ஒருமுறை தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தனது ஆட்டம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

“ எனது நாட்டுக்காக என்ன செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தேனோ, அதை தற்போது செய்து வருவதில் மகிழ்ச்சி.

இதுபோன்ற தருணத்துக்காக, அதிகமான பொறுமை, கடின உழைப்பு, பயிற்சி ஆகியவற்றுடன் காத்திருந்தேன்.
இந்தியாவுக்காக இறுதி ஆட்டத்திலும் இதேபோன்ற ஒரு இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்பதை கடமையாக நினைக்கிறேன்.

அதைச் செய்துவிட்டால் எனது இத்தனை ஆண்டுகால முயற்சிக்கு பலன் கிடைத்ததாக இருக்கும்.” – எனவும் அவர் கூறினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி