ஜப்பானில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
ஜப்பானில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கனகாவா Kanagawa மாகாணத்தின் புஜிசாவா Fujisawa பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கார் மற்றும் சுற்றுலாப் பேருந்து உட்பட குறைந்தது நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கார் ஒன்றை செலுத்திய 77 வயதான மூத்தாட்டி ஒருவரே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மூதாட்டி செலுத்திய கார், குறித்த பகுதிக்குள் நுழைவதற்கு முன்பாகவே பல வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




