கொரிய எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் – கூடுதல் தந்திரோபாய ஆயுதங்களை நிலைநிறுத்த பரிசீலனை
வட கொரியா, தென் கொரியாவுடனான எல்லைப் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பில் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் “கூடுதல் தந்திரோபாய ஆயுதங்களை” நிலைநிறுத்துவது குறித்தும் அந்நாடு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங், கொரிய மத்திய செய்தி முகமையிடம் (KCNA) அளித்த அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்போக்கு கடந்த ஜுன் மாதத்தை விட அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னதாக, தென் கொரியா தனது பிரச்சார ஒலிபெருக்கிகளை அகற்றியதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் வட கொரியாவும் தனது சில ஒலிபெருக்கிகளை அகற்றத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




