இலங்கை செய்தி

மக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசை -மார்ச் 12 இற்கு பிறகு என்ன நடக்கும் ?

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனாலும்  இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவியது.

லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பல பகுதிகளில் நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும் மக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணமுடிந்தது.

எவ்வாறாயினும் தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய பெப்ரவரி மாதம் முடிவதற்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை சில பகுதிகளுக்கு புதிய எரிவாயு கையிருப்புகள் கிடைக்கப்பெற்றிருந்தாலும், இன்னும் பல பகுதிகளுக்கு லிட்ரோ எரிவாயு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பல இடங்களில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடும் தொடர்கின்றது.

இதேவேளை, பெப்ரவரி 26ஆம் திகதி முதல் லாஃப்ஸ் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை