இலங்கை செய்தி

அமைச்சர் சுனிலின் நெடுந்தீவு விஜயம் – தொழில்முனைவோர்களை சந்தித்து ஆலோசனை

நெடுந்தீவில் கடற்படையின் ஆடை தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டதுடன், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்கள், தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

மேலும், நெடுந்தீவில் செயல்பட்டு வரும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா துறையினர் ஆகியோரையும் சந்தித்த அமைச்சர், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தார்.

உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கும் விஜயம் மேற்கொண்ட தோழர் சுனில் ஹந்துன்நெத்தி, அங்கு நிலவும் வளக் குறைப்பாடுகள் மற்றும் நிர்வாகச் சவால்களை ஆராய்ந்ததுடன், பணியாளர்களுடனும் கலந்துரையாடி, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தினார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை