ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸில் அரசுக்கு எதிராக வெடித்துள்ள பாரிய போராட்டம் – நூற்றுக்கணக்கானோர் கைது

பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளை கண்டித்து நடத்தப்பட்ட பொது போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மோசமான வசதிகள் காரணமாக, மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது.

ஆரம்பத்தில் அமைதியாக ஆரம்பித்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி வருகிறது. போராட்டக்காரர்கள் லியோனில் உள்ள சுற்றுலா அலுவலகத்திற்கு தீவைத்துள்ளனர்.

அதே நேரத்தில், மார்சேயில், ஒரு கூட்டம் நகர மண்டபத்திற்குள் நுழைந்து, அராஜகத்தைக் குறிக்கும் ‘A’ என்ற எழுத்தை சுவரில் எழுதியுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பீரங்கியைப் பயன்படுத்தி குறைந்தது 400 பேரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான ஒரு நெருக்கடி மிக்க தருணத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அமைதி காக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் போராட்டங்கள் 2018-ஆம் ஆண்டின் மஞ்சள் அங்கி இயக்கத்தை நினைவூட்டுகின்றன.

அதிகப்படியான பொதுக் கடன், பிரான்சின் கடன் வாங்கும் செலவுகளை 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்திற்குத் தள்ளுவதால், மக்ரோன் மீது இது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்