பிரித்தானிய இளைஞர்கள் ஐரோப்பா முழுவதும் சுதந்திரமாக பணியாற்றுவது குறித்து EU நாடுகளுடன் பேச்சுவார்த்தை
இளைஞர் இடப்பெயர்வுத் திட்டத்தின் கீழ், 30 வயதுக்குட்பட்ட பிரித்தானிய குடிமக்கள் ஐரோப்பா முழுவதும் எந்தவொரு வேலையிலும் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிப்பது குறித்து பிரஸ்ஸல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, இந்த அமைப்புடன் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்த பிரதமர் ஆண்டி பர்னம் முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் விசா வரம்புகள் குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து விசாக்களின் எண்ணிக்கையை 50,000-க்கும் குறைவாகக் கட்டுப்படுத்த இலக்கு வைத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் 150,000 என்ற வரம்பை ஆதரிக்கிறது.
வருகை தரும் மாணவர்களுக்கான பல்கலைக்கழகக் கல்விக் கட்டணக் குறைப்பு தொடர்பான கோரிக்கைகளைத் தாமதப்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பரிசீலித்து வருகின்றன.
இது இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
பொருளாதாரத்தை வலுப்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் ஒரு லட்சியமிக்க உறவை நாடுவதால், 57 சதவீத பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர வாக்களிப்பார்கள் என்று சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




