ஆசியா

இந்தோனேசியாவுடன் இணைந்து பாலஸ்தீனத்திற்கு அமைதிப்படையை அனுப்ப மலேசியா தயார்: பிரதமர் அன்வார்

ஐக்கிய நாட்டு நிறுவனம் அனுமதி வழங்கினால் பாலஸ்தீனத்திற்கு அமைதிப்படையை அனுப்புவது தொடர்பில் இந்தோனீசியாவுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

இந்தோனீசியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டுத் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோவுடன் ஜூலை 1ஆம் திகதி, அன்வார் தொலைபேசி வழியாகப் பேசினார்.இரு தலைவர்களின் கலந்துரையாடலில் பாலஸ்தீனம் குறித்த பேச்சு முக்கியப் பங்கு வகித்தது.

மலேசியா-இந்தோனீசியா அனைத்துலக அமைதிப்படையில் ஒத்துழைப்பு எனும் யோசனையையும் இந்த ஒத்துழைப்பை ஆசியான் வட்டாரம் முழுமைக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தையும் தாம் வரவேற்பதாக மலேசியப் பிரதமர் கூறினார்.

தொலைபேசி வழியான கலந்துரையாடலில் தாங்கள் நடப்பு விவகாரங்கள் குறித்துப் பேசியதாக அவர் சொன்னார்.

குறிப்பாக, வட்டார, அனைத்துலக ஒத்துழைப்பு, அமைதி ஆகியவை பற்றிய பிரபோவோவின் கண்ணோட்டம் பற்றித் தாங்கள் பேசியதாகப் பிரதமர் அன்வார் கூறினார்.

பாலஸ்தீனத்தில் நிலவும் மனிதநேய நிலவரம் குறித்துப் பேசுகையில், மலேசியா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற வாரம் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரபோவோ விரைவில் நலம்பெற வாழ்த்துத் தெரிவித்ததாகவும் மலேசியப் பிரதமர் கூறினார். ராணுவச் சேவையின்போது ஏற்பட்ட காயங்களிலிருந்து நலம்பெற பிரபோவோ அந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டார்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்