இலங்கை செய்தி

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.

இதன்படி, 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 18 ரூபாயினால் குறைக்கப்படுகிறது.

இதற்கமைய, 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை