உலகம்

“பெய்ரூட்டை தாக்குவோம்” : ட்ரம்ப் – நெதன்யாகு இடையான இரகசிய உரையாடல் கசிவு!!

பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட்  ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் ஒன்று கசிந்துள்ளது.

அந்த உரையாடலில் பெய்ரூட் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவோம் என்று நெதன்யாகு கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப்   முற்றிலும் பைத்தியக்காரத்தனம் என விமர்சித்துள்ளார்.

அத்துடன் நடந்து கொண்டிருக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை இத்தகைய நடவடிக்கைகள் சீர்குலைக்கும் என்ற ஈரானிய எச்சரிக்கைகளைச் சுட்டிக்காட்டி, பெய்ரூட்டைத் தாக்குவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதலளித்த நெதன்யாகு வடக்கு இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஹிஸ்புல்லா நிறுத்தினால் மட்டுமே இஸ்ரேலியத் தாக்குதல்கள் இடைநிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பதட்டமான பகிரங்க உரையாடல், இரு தலைவர்களுக்கும் இடையிலான சிக்கலான உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்