பிரதமராக கடைசி ஒருவாரக் காலம் – ஸ்டாமரின் இறுதி திட்டங்கள்
சர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமராக தனது கடைசி முழு வாரத்தை பாரிஸில் கழிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமராக அவர் மேற்கொள்ளும் கடைசி வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்த விஜயத்தின்போது உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவை ஒருங்கிணைப்பதற்காக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து அவர் நிறுவிய ‘விருப்பமுள்ளவர்களின் கூட்டணி’யின் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
பிரான்சில் தனது உத்தியோகப்பூர்வ கடமைகளை நிறைவு செய்யும் விதமாக, செவ்வாய்க்கிழமை மற்ற உலகத் தலைவர்களுடன் இணைந்து பாஸ்டில் தின நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஆண்டி பர்ன்ஹாம் போட்டியின்றி புதிய தொழிலாளர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 20 அன்று பிரதமர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




