ஐரோப்பா

ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற காளை ஓட்டத் திருவிழா – 09 பேர் காயம்

ஸ்பெயினில் காளை ஓட்டத் திருவிழா இன்று பம்ப்ளோனாவின் (Pamplona) தெருக்களில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்ற நிலையில், 09 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்வு இரவு முழுவதும் தொடர்ந்தது. வாணவேடிக்கைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற நிலையில் ஏராளமான மக்கள் ஒன்றுக்கூடி நகரமே களைக்கட்டியது.

இந்நிலையில் இந்த ஓட்டத்தில் பங்கேற்ற வீரர்கள் 09 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 05 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நவாரா பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

எஸ்டாஃபெட்டா (Estafeta ) தெருவுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமடைந்திருந்தமையால் போட்டியாளர்கள் நிலைக்குலைந்து தடுமாறியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்