பொழுதுபோக்கு

காதலை உறுதிப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்… பையன் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் நடிகை கீர்த்தி. தற்போது 32 வயதாகும் கீர்த்தி சுரேஷ் யாரை திருமணம் செய்து கொள்வார்? எப்போது கல்யாணம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.

மேலும், அவர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது.

அதுமட்டுமின்றி ஆண்டனி தட்டில் பற்றி அலசி ஆராய்ந்த போது அவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் என்று தெரிய வந்தது. ஆனால், சொந்த ஊர் கேரளாவாம். கேரளாவில் ஆண்டனி தட்டில், கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணத்தில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து வந்த நிலையில் கொச்சியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தபோது தான் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக பொத்தி பொத்தி வளர்ந்து வந்த நிலையில் இன்று வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பின்புறமாக திரும்பி சூரியனை பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு 15 வருடம் மற்றும் கவுண்டிங் என்று குறிப்பிட்டு அது எப்போதும் ஆண்டனி கீர்த்தி AntoNY x KEerthy ( Iykyk) என்று பதிவிட்டுள்ளார். மேலும், உங்களுக்கு தெரிந்தால் உங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/DC3QoOxpuJN/

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்