ட்ரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
FILE PHOTO: U.S. President-elect Donald Trump gestures as he meets with House Republicans on Capitol Hill in Washington, U.S., November 13, 2024. REUTERS/Brian Snyder/File Photo
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜனவரி 20ஆம் திகதி ட்ரம்ப் பதவி ஏற்கவுள்ளார்.
இந்தநிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார்.
இலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நியூயார்க்கிலிருந்து முக்கிய பதவியொன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக் உள்ளிட்டோருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





