உலகம்

ஜப்பான் சிவப்புக் கோட்டைத் தாண்டிச் செல்கிறது – சீனா எச்சரிக்கை!

தைவான் தொடர்பான ஜப்பானின் ஜனாதிபதி கூறிய கருத்துக்களை விமர்சித்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் ஜப்பான் சிவப்புக் கோட்டைத் தாண்டிச் செல்வதாகவும், அதைத் தொடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi)  தைவான் விவகாரத்தில் இராணுவ ரீதியாகத் தலையிட முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“சீனா தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும்,  இரத்தம் மற்றும் தியாகத்தால் பெறப்பட்ட சாதனைகளைப் பாதுகாக்கவும் உறுதியுடன் பதிலடி கொடுக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவான் மீதான சீனாவின் தாக்குதலுக்கு ஜப்பான் எதிர்வினையாற்றும் என சானே தகைச்சி (Sanae Takaichi)  நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் இருநாடுகளின் அரசியல், கலாச்சாரம், பொருளாதார உறவில் பாரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விடயத்தை தெளிவுப்படுத்த சீனா ஐ.நாவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

அந்த கடிதம் குறித்து பதிலளித்த  ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் சீனாவின் கூற்றுக்களை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று நிராகரித்தது.

அத்துடன் அமைதிக்கான ஜப்பானின் உறுதிப்பாடு மாறவில்லை என்றும்  கூறியுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்