இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் காலமானார்

திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் தங்கராசா ராசமணி இன்று புதன்கிழமை (29) அவரது வீட்டில் காலமானார்.

திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் தங்கராசா ராசமணி இன்று புதன்கிழமை (29) அவரது வீட்டில் காலமானார்.

இலங்கை தமிழரசு கட்சியில் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அவர் பிரதேச சபை உறுப்பினராக கடமை ஆற்றி வந்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து எந்த ஒரு கட்சி பாகுபாடு இன்றியும் சமூக நல்லிணக்கிற்கு மிகவும் அளப்பரிய சேவையாற்றியவர்.

மொரவெவ சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதியாகவும் கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாய சங்கம் மற்றும் கோயில் சங்கங்களில் தலைவராகவும் கடமை ஆற்றி வந்துள்ளார்.

இவரது சடலம் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நொச்சிக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை