உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போரில் ஈரானுக்கு உதவும் சீனா: 400 ஏவுகணைகளை அனுப்ப திட்டம்?

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பை சீரமைத்து வரும் ஈரான், சீனா தயாரித்த தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (Shoulder-fired air-defence missile launchers) முதல் தொகுதியாக 400 ஏவுகணைகள் வரை அடுத்த சில வாரங்களுக்குள் கொள்வனவு செய்யவுள்ளதென தெரியவருகின்றது.

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பை சீரமைத்து வரும் ஈரான், சீனா தயாரித்த தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (Shoulder-fired air-defence missile launchers) முதல் தொகுதியாக 400 ஏவுகணைகள் வரை அடுத்த சில வாரங்களுக்குள் கொள்வனவு செய்யவுள்ளதென தெரியவருகின்றது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து, தனது குறுகிய தூர வான் பாதுகாப்பை வலுப்படுத்த ஈரான் மேற்கொண்ட மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக $60-70 மில்லியன் மதிப்புள்ள இந்த கொள்முதல் பார்க்கப்படுகிறது.

இந்தப் போர், ஈரானின் இராணுவ தளங்கள் மற்றும் மூலோபாய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் திறனில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியிருந்தது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட QW-12 மற்றும் FN-16 ஏவுகணைகள் உட்பட 300 முதல் 400 வரையிலான மனிதரால் சுமந்து செல்லக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகளை (MANPADS) வாங்குவது இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் தரப்பிற்கும் சீன விநியோகஸ்தருக்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்ட ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ‘ஜோங்கிங் பாவ்ஷாங் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட்’ (Zhongqing Baoshang International Investment) என்ற நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “தொடர்புடைய தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. அமைதியை மேம்படுத்துவதிலும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சீனா தொடர்ந்து பங்காற்றி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

தரைவழிப் பாதைகளை ஆராயும் சீனாவும் ஈரானும்

ஈரான் கடந்த இரு தசாப்தங்களில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ரேடார்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ள போதிலும், கையடக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமானவை என்று இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் அவற்றை விரைவாகப் பரப்பவும், சிறிய குழுக்களால் இயக்கவும், அடிக்கடி வேறு இடங்களுக்கு மாற்றவும் முடியும். இதனால் நிலையான வான் பாதுகாப்பு அமைப்புகளை விட இவை தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு குறைவு.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி