உலகம் செய்தி

லெபனானில் புதிய இடப்பெயர்வு உத்தரவு: மக்களுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் புதிய இடம்பெயர்வு உத்தரவை வெளியிட்டுள்ளது.

ஹபூச் நகரில் வசிக்கும் மக்களை உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு, திறந்த வெளிப் பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ராயீ, சமூக வலைத்தளமான X இல் வெளியிட்ட அறிவிப்பில், “ஹிஸ்புல்லா தொடர்புடைய இடங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது” என எச்சரித்துள்ளார்.

போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், இந்த நடவடிக்கை தொடர்வதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இராணுவ அழுத்தத்தின் மூலம் மக்களை பெருமளவில் இடம்பெயரச் செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி