இஸ்ரேலிய தூதரகத்திற்குள் கத்திகளுடன் நுழைய முயன்ற நபர் குற்றவாளியாக அறிவிப்பு!
லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்குள் கத்திகளுடன் நுழைய முயன்ற நபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குவைத்தில் பிறந்த 34 வயதான அப்துல்லா அல்பாத்ரி (Abdullah Albadri) காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இங்கிலாந்தில் புகலிடம் கோரிய அவர் மீது பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாரானது மற்றும் இரண்டு கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
காசாவில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப் ‘பழிவாங்கும்’ நோக்கத்தில் அவர் செயல்பட்டதாக நடுவர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையினரின் விசாரணையில் அவர் இந்த நோக்கத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.





