ஈரானை தாக்கும் நாடுகளை ஆக்கிரமிக்க IRGC தீர்மானம்
ஈரானைத் தாக்கும் எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கப் போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அச்சுறுத்தியுள்ளது.
ஈரானின் மேற்கு எல்லைக்கு அருகே இஸ்ரேல் போர் விமானப் பயிற்சிகளை நடத்தியதாக வரும் செய்திகளுக்கு மத்தியில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானிய ஆட்சியை கவிழ்க்கும் பணியில் ஈடுபடுமாறு மொசாட், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் இராணுவ உளவுத்துறைக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




