வெள்ளத்தில் மூழ்கிய நபரை மீட்ட ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்
ஆஸ்திரேலியாவில் வெள்ள நீரில் மூழ்கிய காரில் இருந்து நபரை மீட்ட தொலைக்காட்சிச் செய்தியாளர் மற்றும் பொதுமக்கள் ஒருவரின் தணிச்சலான நடவடிக்கை தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய ஊடகமான ABC நிறுவனத்தின் செய்தியாளர் வில் முர்ரே, குயின்ஸ்லேந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகருக்கு வடக்கே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வாகனம் ஒன்றில் வெள்ள நீரைக் கடக்க முயன்ற நபர், காரின் என்ஜின் பழுதடைந்ததால் நீரில் மூழ்கத் தொடங்கியதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார் முழுமையாக நீரில் மூழ்குவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு, முர்ரே மற்றும் மற்றொரு நபர் வெள்ளத்தில் நீந்திச் சென்று காரின் ஓட்டுநரைப் பத்திரமாக வெளியே இழுத்து வந்தனர்.
“அவர்கள் இருவரும் நிச்சயம் அந்த மனிதரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர், என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஏபிசி கேமராமேன் லிஸ் பிக்கரிங் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நடந்த போது, Morayfield நகரில் சுமார் 170 மி.மீ (6.7 அங்குலம்) மழை பதிவாகியிருந்தது.




