ஈராக்கின் புதிய பிரதமருக்கு ஈரான் வாழ்த்து: அமெரிக்கா எச்சரிக்கை!
ஈராக்கின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலி அல்-சைதிக்கு Ali al-Zaidi , ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி Abbas Araghchi தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில், ஒரு மாத காலத்திற்குள் புதிய அமைச்சரவையை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு புதிய பிரதமர் முன்னிலையில் உள்ளது.
ஈராக்கின் அரசியல் நிலைத்தன்மைக்கு ஈரான் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது.
ஈரான் ஆதரவு குழுக்களின் ஆதிக்கம் அரசாங்கத்தில் இருந்தால் ஒத்துழைப்பை நிறுத்தப்போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கில் நிலவி வந்த நீண்டகால அரசியல் இழுபறிக்கு மத்தியில், இந்த மாற்றம் இரு நாடுகளின் வெவ்வேறு நிலைப்பாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.





