செய்தி விளையாட்டு

FIFA World Cup 2026: ஈரானால் 10 நிபந்தனைகள் முன்வைப்பு!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தமது நாடு பங்கேற்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.

எனினும், வீரர்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உறுதி செய்தல் உட்பட 10 முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

குறிப்பாக, தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், விசா நடைமுறைகளில் சிக்கல் இருக்கக்கூடாது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

மேற்படி நிபந்தனைகள் ஏற்கப்படும்பட்சத்திலேயே மூன்று நாடுகளிலும் ஈரான் விளையாடும் என தெரியவருகின்றது.

அமெரிக்காவில் தமது நாடு பங்கேற்கும் போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதேபோல கனடாவில் நடைபெற்ற FIFA ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ஈரான் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி