இலங்கையில் காணாமல் போன மாணவி தொடர்பில் வெளியான தகவல்

காணாமல் போன கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி உயிரிழந்துள்ளார்.
நேற்று அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே அம்மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவி காணாமல் போன விடயம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் அவர்களது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
(Visited 29 times, 1 visits today)