உலகம் விளையாட்டு

கடைசி T20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும். வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ