இந்தியா செய்தி

பாகிஸ்தான் இராணுவம் இயற்கை வளங்களை சுரண்டுவதாக இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் இயற்கை வளங்கள் அந்நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படாமல், இராணுவத்தின் தனிப்பட்ட நலன்களுக்காக சுரண்டப்படுவதாக ஐ.நா.வில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் இயற்கை வளங்கள் அந்நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படாமல், இராணுவத்தின் தனிப்பட்ட நலன்களுக்காக சுரண்டப்படுவதாக ஐ.நா.வில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இயற்கை வளங்கள் மற்றும் மோதல்கள் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றிய இந்தியாவின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதி பர்வேனேனி ஹரிஷ், பாகிஸ்தான் இராணுவம் நாட்டின் கனிம வளங்களைச் சுரண்டுவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் இராணுவத் தளபதி வெளிநாட்டுத் தலைவர்களிடம் கனிமக் கற்கள் அடங்கிய மரப்பெட்டியைக் காண்பித்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதில் இராணுவத்தின் பங்களிப்பை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானின் உண்மையான ஆட்சியாளர்களாகச் செயற்படும் இராணுவம், நாட்டின் இயற்கை வளங்களை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும், தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அவற்றைச் சுரண்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி