இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் இணக்கப்பாட்டிற்கு பிறகு அமெரிக்க தூதுவர் மற்றும் திறைசேரி செயலாளருக்கு இடையில் விசேட சந்திப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு எட்டப்பட்டதையடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது  சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அங்கீகாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை  மீட்சியை ஊக்குவிப்பதற்காக வேலைத்திட்டம் என்பவற்றை உறுதிசெய்ய தேவையான மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து  நல்லாட்சி,  திறமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் ஈடுபடுத்தும் பொதுக் கலந்தாய்வை எளிதாக்கும் சீர்திருத்தங்கள்,  குரல்களின் பன்முகத்தன்மையை […]

இலங்கை செய்தி

பாடசாலை ஒன்றில் மாணவனை மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை!

  • April 11, 2023
  • 0 Comments

பா கம்பஹா – பல்லேவெல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 7 வயதான பாடசாலை மாணவணை மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை புரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 12 வயதான மாணவனை தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார் மேலும் சில மாணவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஐந்து மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பாரிய பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக […]

இலங்கை செய்தி

கேக் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும்  கேக்களை தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி […]

இலங்கை செய்தி

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அவலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு

  • April 11, 2023
  • 0 Comments

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள்  சனத்தொகை  நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப்  பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை  நேற்று […]

இலங்கை செய்தி

பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் இந்த வலயத்தின் முதல் நாடாக இலங்கை மாற்றப்படும் என்கிறார் ஜனாதிபதி

  • April 11, 2023
  • 0 Comments

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை  அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும்  ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள  முதலீட்டாளர்களுடன் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் […]

இலங்கை செய்தி

மதவாச்சி ரயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பிற்கு மத்தியில் எரிபொருள் திருட்டு

  • April 11, 2023
  • 0 Comments

மதவாச்சி ரயில் நிலையத்தில் எரிபொருள் தாங்கியின் சீல்களை உடைத்து 6 லட்சத்து 11,550 ரூபாய் பெறுமதியான டீசல் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து சுமார் 1500 லீற்றர் டீசல் திருடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. 24 மணிநேர பாதுகாப்பு இருந்த போதிலும் எரிபொருள் திருடப்படுவது பிரச்சினைக்குரியது எனவும் கூட்டமைப்பு […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் […]

இலங்கை செய்தி

கொழும்பில் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கழிவகற்றல் கட்டமைப்பிற்குள் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட நிலையில் நகர சபை ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கழிவகற்றல் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளுக்காக பிற்பகல் கொழும்பு நகர சபையைச் சேர்ந்த குழுவொன்று சென்றுள்ளது. இதன்போது குறித்த கட்டமைப்பிற்குள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் ஆஸ்திரேலியா

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. ஆஸ்திரேலியா உட்பட 03 வௌிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீனாவின் சினொபெக் (Sinopak), ஆஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலியம் (United Petroleum) மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பாக்ஸ் (R M Parks) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையில் தற்போது ஐஓசி […]

செய்தி தமிழ்நாடு

காண்போர் கண்களை குளிரவைத்த மது எடுத்தல் விழா

  • April 11, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தின் காவல் தெய்வமாக வடக்குத் திசையில் கல்லனைக் கால்வாயின் கரையில் வீரமாகாளியம்மன் அருள்பாளித்து வருகிறார். இந்தக் கோவிலில் கடந்த புதன் கிழமை நவதானியங்களை முளைக்க வைத்து முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்று மேற்பனைக்காடு கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள் நல்ல மழைப் பொழிவு வேண்டியும், இப்பகுதியின் பிரதான விவசாயமான தென்னை விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும் மது […]