இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் – விசாரணையில் வெளிவந்த தகவல்
இரத்தினபுரி நிரியல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய நிபுணர் முதித குடாகம தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், யுவதியின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடலில் காயங்கள் ஏதும் […]













