இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

  • April 26, 2023
  • 0 Comments

மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாத்தறை, நுபே புகையிரத கடவைக்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பெந்தோட்டகேவத்த என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேலும் மூன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக […]

செய்தி தமிழ்நாடு

ஆற்றின் குறுக்கே தடுப்பணை கேரளா அரசை கண்டித்து போராட்டம்

  • April 26, 2023
  • 0 Comments

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை மறித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி அருகில் கூலி கடவு என்ற பகுதியில் கேரளா அரசு தடுப்பணையை கட்டி வருகிறது.90% பணிகள் முடிந்து விட்ட நிலையில் மேலும் இரண்டு அணைகள் கட்ட ஆயத்தமாகி வருகின்றனர். இந்த அணை கட்டுவதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு என்பது அதிகமாகவே […]

செய்தி தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி மக்கள் மகிழ்ச்சி

  • April 26, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தாலும் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதியில் பகலில் கார்மேகம் சூழ்ந்து திடீரென மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக புதுக்கோட்டை நகரப் பகுதிகளான கிழ ராஜ வீதி அய்யனார்புரம் காந்திநகர் அசோக் நகர் சத்தியமூர்த்தி நகர் சின்னப்பா நகர் சேங்கன்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]

வட அமெரிக்கா

கனடாவில் வீடு புகுந்து வாள்வெட்டு; பொலிஸாரிடம் சிக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்கள்

  • April 26, 2023
  • 0 Comments

ஒன்ராறியோவில் வீடு புகுந்து தாக்கியது, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ள இருவர் மீது பீல் பிராந்திய பொலிஸார் வழக்குப் பதிந்துள்ளனர். கடந்த ஆண்டு பிராம்டன் பகுதியில் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பியிருந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு இளைஞர்கள், 22 வயது அபிஷேக் அபிஷேக் மற்றும் ஹர்மன்தீப் பெஹ்லீம் ஆகிய இருவர் மாயமாகியிருந்த நிலையில் தற்போது கைதாகியுள்ளனர். 2022 மார்ச் மாதம் பல பேர்கள் கொண்ட குழு ஒன்று மேஃபீல்ட் […]

உலகம் முக்கிய செய்திகள்

பூமியை கடக்கும் மிகப் பெரிய விண்கல்

  • April 26, 2023
  • 0 Comments

பூமியை இன்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், நாளை 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும் பேசும்பொருளாக உள்ளது. அந்தவகையில் இன்று பூமியை நான்கு விண்கற்கள் கடக்க உள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு […]

செய்தி தமிழ்நாடு

முதியவர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • April 26, 2023
  • 0 Comments

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்தில் திடீரென முதியவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். 1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதியவர்களை சந்தித்து மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 109 முதியவர்களுக்கு புடவை, […]

செய்தி தமிழ்நாடு

கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு ரூபாய் 50,000 அபராதம்

  • April 26, 2023
  • 0 Comments

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோவில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்து மர்ம நபர் வாளையார் எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டி உள்ளார். இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் இது குறித்து கேட்டபோது அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார். இதை […]

வாழ்வியல்

கூந்தல் நரையை கொஞ்சம் தள்ளிப் போடலாம்

  • April 26, 2023
  • 0 Comments

சரியான வயது வருவதற்குள் முடி நரைக்க துவங்கி விட்டதா ? இதை கொஞ்ச நாட்களுக்கு தள்ளி போடலாம்.  நரைமுடி என்ன காரணத்தினால் வந்தது என்பதை முதலில் அறிந்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் மரபணுவால் வந்த நரையை தவிர மற்ற அனைத்தையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். நரைமுடி உடல்நல பிரச்சனையாக இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெறுவது அவசியம். இதனால் நரைமுடி தீவிரமாகாமல் மற்ற முடிகளுக்கு பரவாமல் தடுக்க முடியும். அதோடு நீங்கள் கவனம் செலுத்த […]

செய்தி தமிழ்நாடு

இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்

  • April 26, 2023
  • 0 Comments

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல் – பக்தர்கள் புகாரால் 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 150க்கும் மேற்பட்ட மொடையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வருகின்றனர். மேலும் பல 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு […]

செய்தி தமிழ்நாடு

தண்டு மாரியம்மன் கோவில் தீச்சட்டி நேர்த்திக்கடன் திருவிழா

  • April 26, 2023
  • 0 Comments

கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஊர்வலம், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலம் சென்று நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கிய இந்த ஊர்வலமானது […]