தொழிலுக்காக வௌிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு அறிமுகமாகும் நடைமுறை
இலங்கையில் இருந்து தொழிலுக்காக வௌிநாடு செல்லும் பெண்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிய சுற்றுநிருபமொன்று வௌியிடப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த சுற்றுநிருபத்தை வௌியிட்டுள்ளது. இதற்கமைய, இரண்டு வயதிற்கு குறைவான பிள்ளைகளை உடைய தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. அத்துடன், தொழிலுக்காக வௌிநாடு செல்லும் 45 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றுநிருபத்திற்கமைய, 18 வயதிற்கு குறைவான […]













