இலங்கை

இறக்குமதி செய்யப்படும் மா மற்றும் சீனியின் விலை அதிகரிப்பு!

  • May 8, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா, மற்றும் சீனிக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மா, மற்றும் சீனிக்கான சுங்க வரி சலுகை நீக்கப்பட்டுள்ளதால், அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல், அமுலாகும் வகையில்,   ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,  கோதுமை மாவுக்கு 3 […]

ஆஸ்திரேலியா

வீடு சுத்தம் செய்யும் கருவிக்குள் புகுந்த பாம்பு; கணவர் எடுத்த உடனடி முடிவு

  • May 8, 2023
  • 0 Comments

ஆஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் மனைவி ஒருவர் விச பாம்பு ஒன்றை சுத்தம் செய்யும் கருவி கொண்டு பிடித்ததை தொடர்ந்து, அவரது கணவர் உடனடியாக அவசர கால உதவி குழுவுக்கு அழைப்பு விடுத்தார். குயின்ஸ்லாந்தின் ஹெர்வி பே பகுதியில் உள்ள விடுமுறை தின விடுதியில் சுற்றுலாவுக்கு வந்த பெண் ஒருவர் தரையை சுத்தம் செய்யும் கருவியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது அதில் சிறிய மஞ்சள் தலை சாரை பாம்பு ஒன்று சிக்கியது.இதை தொடர்ந்து ஹெர்வி பே-வில் உள்ள […]

mahinda rajapakse இலங்கை

ராஜபக்ஷக்களுக்கு எதிரான மனு ஜுலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது!

  • May 8, 2023
  • 0 Comments

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும்  பசில் ராஜபக்க்ஷ ஆகியோருக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த மனு  இன்று  (08) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு […]

உலகம்

அமெரிக்காவில் முறைகேடு குறித்து தகவல் வழங்கியவருக்கு 279 மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டது!

  • May 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் முறைகேடு ஒன்று தொடர்பாக தகவல் அளித்த ஒருவருக்கு 279 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை  அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கமைப்பாளர்,  இந்த ஆணைக்குழுவின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிகப் பெரிய சன்மானம் இதுவாகும் எனத் தெரிவித்தார். இதற்கு முன்னர் இதுபோன்று ஊழலை அம்பலப்படுத்தியமைக்காக ஒருவருக்கு  ஆகக்கூடுதலான வெகுமதியாக 114 மில்லியன் டொலர்கள் 2020 ஒக்டோபரில் வழங்ப்பட்டிருந்தன. அத்தொகையைவிட இரு மடங்குக்கும் அதிகமான வெகுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. […]

செய்தி தமிழ்நாடு

ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

  • May 8, 2023
  • 0 Comments

கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வில், காவல்துறையினர் கலவரக்காரர்கள் போல செயல்பட்டனர். இதில் அவர்களை நோக்கி டிரோன் […]

வட அமெரிக்கா

உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டுக்கு ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்கா

  • May 8, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ஆயுத உதவிகளை தொடர்ந்து அளித்துவரும் அமெரிக்கா தற்போது அதே அவசர கால உதவியாக தைவானுக்கும் ஆயுதங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய பின்னர் இதுவரை 35 முறை அமெரிக்கா ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது இந்த நிலையில், 2023 நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக, தைவானுக்கு 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளிக்க காங்கிரஸ் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது […]

செய்தி தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் வழங்கிய ஊதிய தொகை வழங்கவில்லை

  • May 8, 2023
  • 0 Comments

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அரசாங்கம் கூறிய 721 ரூபாய் ஊதியம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனை அடுத்து 3 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் 721 ரூபாய் வழங்க அறிவுறுத்தியதை அடுத்து அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும், எனவே அதனை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க […]

இலங்கை

இலங்கை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் – மற்றுமொருவர் கைது

  • May 8, 2023
  • 0 Comments

களுத்துறை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த கார் சாரதி கைது செய்யப்பட்டார். முன்னதாக மாணவி உயிரிழந்தது தொடர்பாக விடுதிக்கு அவருடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது குறித்த பாடசாலை மாணவி நேற்று மாலை 6.30 மணியளவில் […]

வாழ்வியல்

கண் பார்வையை மேம்படுத்த உதவும் உணவுகள்

  • May 8, 2023
  • 0 Comments

கண் பார்வையை மேம்படுத்த உதவும் உணவுகள் 1. வைல்ட் ரோஸ் டீ கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது. 2. கொத்தமல்லி இலைகள் கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது. 3. கேரட் […]

இலங்கை

நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில்

  • May 8, 2023
  • 0 Comments

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) காலை நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 4 ஆம் திகதி ஜனாதிபதி இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.