கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா..?
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. எங்கள் மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பணியாளர்கள், மாணவர்கள், மருத்துவ வசதி தேடுபவர்கள், தொழில் முனைபவர்கள் மற்றும் பல்வேறு விஷயங்களுக்காக கன்னியாகுமரி மற்றும் சென்னை இடையே மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சுற்றுலா தலமாக அமைந்திருப்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி வந்து சேர ரயில் வசதி மிக குறைவாக காணப்படுகிறது. […]













