கவுதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கும் படம்
பழம்பெரும் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் கவுதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திகேயன் கூறுகையில், “கௌதம் மேனன் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். க்ளைமாக்ஸில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் அவர், முதல்முறையாக சில சண்டைக்காட்சிகளை நிகழ்த்தவுள்ளார். அவர் ஏற்கனவே தனது பகுதிகளை படமாக்கியுள்ளார்” என்றார். […]













