ஒபாமா வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை குறித்த ஒபாமாவின் கருத்திற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து கண்டனம் வெளியிட்டுள்ளார் . அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் பிரதமர் மோடியும் ஜனாதிபதி ஜோ பைடனும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்களின் இந்த பேட்டிக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,“இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் நான் பேசியிருந்தால் […]













