இலங்கை வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மற்றுமொரு நபர்!
காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளியும் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (13.07) உயிரிழந்துள்ளார். மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளராக பணியாற்றிய ஒருவர், காய்ச்சல் காரணமாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கேனுலாவில் (டியூப்) இருந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த கானுலாவில் கிருமி தொற்று […]













