வட அமெரிக்கா

அமெரிக்காவில் 9 மாத குழந்தைக்கு 17 வயதான தாய் செய்த கொடூரம்

அமெரிக்காவில் 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.

தன்னைத் தூங்கவிடாமல் அழுதுகொண்டே இருந்த குழந்தைக்கே தாயார் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கு 9 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், குழந்தை அருந்திய பாலுடன் ஃபெண்ட்டானில் எனப்படும் மயக்க மருந்து அதிகளவு கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணியாகக் கொடுக்கப்படும் ஃபெண்ட்டானில் மருந்தை அதிகளவு எடுத்துக் கொண்டால் உயிரிழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

அப்படி சுமார் 10 பேரை கொல்லக்கூடிய அளவுக்கான ஃபெண்டானிலை பாலுடன் கலந்து குழந்தைக்குக் கொடுத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தன்று தாம் சோர்வாக இருந்ததாகவும் தூங்கலாம் என்று நினைத்தபோது குழந்தை அழுதுகொண்டே இருந்ததாகவும் குழந்தையின் தாய் கூறியுள்ளார். குழந்தையை தூங்க வைக்க எண்ணிய அவர், போதைப் பொருளான கொக்கைன் என நினைத்து, ஃபெண்ட்டானிலை பாலுடன் கலந்து கொடுத்தது தெரியவந்தது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்