இலங்கை

இலங்கை வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மற்றுமொரு நபர்!

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளியும் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (13.07) உயிரிழந்துள்ளார்.

மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளராக பணியாற்றிய ஒருவர், காய்ச்சல் காரணமாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கேனுலாவில் (டியூப்) இருந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவருக்கு  பொருத்தப்பட்டிருந்த கானுலாவில் கிருமி தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கானுலாவில் இருந்த  பாக்டீரியா தொற்றுதான்  மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்