மோசடி வழக்கில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கைது
ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ஓங் பெங் மீதும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், அப்படியானால் அமைச்சர் ஒருவர் ஊழலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது என்றும் ஊழல் புலனாய்வுப் பணியகம் அறிக்கை […]













