மட்டக்களப்பு மக்களிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஸ்டங்களை எதிர்நோக்கிவரும் சூழ்நிலையில் சுற்றுலாத்துறையினை காரணம்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்களினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை […]













