வில்லால் இந்திய சாதனையை முறியடித்த இலங்கை
இன்று (16) 128 வில்வித்தை வீரர்களின் பங்கேற்புடன் ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களில் 30,000 அம்புகளை எய்து இலங்கை வில்வித்தையில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஹோமாகம, டயகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வைத்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
100 வில்லாளர்கள் பங்குபற்றிய ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களில் 17,000 அம்புகளை எறிந்து இந்த உலக சாதனையை இந்தியா முன்பு பெற்றிருந்தது.
இந்த உலக சாதனையை அமைப்பதில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவும் கலந்து கொண்டார். சாகித்ய வில்வித்தை கிளப் மற்றும் ரேஸ் கோர்ஸ் வில்வித்தை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியாவின் Wallen Book of Word Records வெளியிட்ட உலக சாதனையை படைத்ததற்காக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.