இலங்கை

தமிழினத்தை சீண்ட வேண்டாம் – செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை!

  • July 21, 2023
  • 0 Comments

சரத் வீரசேகர  இனவாதம் கக்குவதை  தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்ற (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்த பேசிய அவர், சரத் வீரசேகர  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை என்கிறார். அதே போல் சமஸ்டியை வழங்க முடியாது என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார். […]

இந்தியா

மணிப்பூரை அடுத்து மேற்கு வங்காளத்திலும் அரங்கேறிய கொடூரம்; பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்!

  • July 21, 2023
  • 0 Comments

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்திலும் இதேபோன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேங்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8ம் திகதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்சலா பகுதியில் திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த 40 பேர் தன்னை […]

அறிந்திருக்க வேண்டியவை உலகம் பொழுதுபோக்கு

பூகம்பம், தீ, வெள்ளம்!! எல்லோரும் அழிய போறாங்க.. தீர்க்கதரிசியின் அதிர்ச்சி செய்தி….

  • July 21, 2023
  • 0 Comments

பாபா வாங்கே – இவர் பல்கேரியாவை சேர்ந்தவர்.. கண்பார்வையற்றவரும் கூட.. 85ம் வயதில் 1996-ம் வருடம் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை உலக மக்களால் மதிக்கப்படுகிறார். 12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் பலித்தும் உள்ளது.. அவைகளில் பல ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்தும் […]

இலங்கை

கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் சீனா!

  • July 21, 2023
  • 0 Comments

சீனா தீவிர வானிலை மாற்றங்களை எதிர்கொள்கிறது.  சீனாவின் பல்வேறு பகுதிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர். பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் உச்ச மழைக்காலம் பொதுவாக ஜூலை பிற்பகுதியில் நிகழ்கிறது, ஆனால் இம்முறை ஜுலை மாதத்திற்கு முன்னதாக கடுமைய மழை, மற்றும் வெப்பத்தையும் எதிர்கொண்டது. வடமேற்கு ஜின்ஜியாங் மற்றும் அண்டை மாநிலமான கன்சு மாகாணம் போன்ற உள்நாட்டுப் பகுதிகள் 35 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் அதற்கு […]

ஐரோப்பா

ஆட்சியை இழக்கும் அபாயம்! இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு ரிஷி சுனக் கருத்து

இரண்டு இடைத்தேர்தல் தோல்விகளை சந்தித்தாலும், அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிபெற முடியும் என்று ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். இந்த இடைத் தேர்தல் முடிவுகள் ரிஷி சுனக்கிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைவது நிச்சயம் என்றே கூறுகிறார்கள். பிரித்தானியாவில் நடைபெற்ற மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்துள்ளது. மேற்கு லண்டனில் உள்ள உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில் மட்டும் கன்சர்வேடிவ் […]

இந்தியா

விபத்தை வேடிக்கை பார்த்த 9 பேர் பரிதாபமாக பலி! – சாரதியை கைது செய்த பொலிஸார்

  • July 21, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் 9 பேரை காரை ஏற்றி கொன்ற ஓட்டுநரை பொலிஸார் கைது செய்தனர். குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று முன்தினம் அதிகாலை இரு வாகனங்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பின்பு, விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் போக்குவரத்து பொலிஸாரும், ஊர்க்காவல் படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். அப்போது, என்ன […]

ஆசியா

மனச்சோர்வை தடுக்க வாடகை காதலிகள்;புது முயற்சியில் ஜப்பான் அரசாங்கம்!

  • July 21, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டு அரசாங்கம் ஒரு பிரத்யேக இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் வாடகை காதலியை தருவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் நாட்டில் காதலன் அல்லது காதல் இல்லாதவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 3000 ரூபாய் செலுத்தி வாடகை காதலி அல்லது காதலனை பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையத்தில் வயது சம்பளம் போன்ற விவரங்களை பதிவு செய்தால் அவர்களுக்கு தகுந்தவாறு வாடகைக்கு காதலன் அல்லது காதலி கிடைப்பார்களாம். இந்நிலையில் […]

இலங்கை

மன்னார் நகர பேருந்து நிலையத்தின் கட்டிட தொகுதியில் சமுதாய சீர்கேடுகள் -மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் விசனம்

  • July 21, 2023
  • 0 Comments

மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிட தொகுதியில் தொடர்ச்சியாக சமுதாய சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என மன்னார் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(21) மன்னார் நகர சபையின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல்மாடி […]

பொழுதுபோக்கு

தற்கொலைக்கு முயற்சி செய்த அப்பாஸ்! இப்போது டாக்சி டிரைவராக வேலை செய்கிறாரா?

பிரபல தமிழ் நடிகர் அப்பாஸ், நியூசிலாந்தில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருவதுடன் டாக்சி ஓட்டி வருவதைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைப்படத்தில் தோன்றிய அப்பாஸ், அதில் சலிப்பு ஏற்பட்டதாலும், தான் செய்யும் வேலையை ரசிக்காததாலும் திரைப்படங்களை விட்டு விலகியதாகக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் நாயகனாக போற்றப்பட்ட நடிகர் அப்பாஸ், சுமார் 8 வருடங்களாக திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர்  தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் குடியேறினார். அப்பாஸ் திரைப்பட […]

இலங்கை

ராஜபக்ஷக்களின் மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சி!

  • July 21, 2023
  • 0 Comments

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்து ராஜபக்ஷகள்  செய்த ஊழல், மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய (21.07) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  சம்பந்தப்பட்ட குழுவில் உள்ளவர்கள் ராஜபக்ஷவிற்கே  விசுவாசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கம் பழைய மோசடி மற்றும் ஊழலை தொடரும் வகையில் செயற்பட்டு வருவதாகவும்,  அமைச்சர்களும் மக்களை ஏமாற்றும் […]