பொலிஸ் வேடமணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது!
பொலிஸ் வேடமணிந்து வீடுகளுக்குள் பலவந்தமாக நுழைந்து குடியிருப்பாளர்களைத் தாக்கி சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் மூளையாக செயற்பட்ட ஒருவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்மாகாணத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹொரண பொக்குனுவிட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 ஆயிரம் மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகநபர்களிடம் இருந்து, பொலிஸ் சீருடைக்கு […]













