யாழில் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியொருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த நான்கு மாதங்களாக குறித்த சிறுமி கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள வீட்டில் தங்கி நின்று வீட்டுப் பணிப்பெண்ணாக பணி புரிந்துள்ளார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் குறித்த […]













