இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்க அழைப்பு!

  • July 27, 2023
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 2500 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு நீதி கோரி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை 28.07) நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வுகளில் இருந்து வெளிபடும் எச்சங்கள் எங்கள் உறவுகளுடையதா என்ற கேள்வி எழுவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி […]

இலங்கை

நாய்க்கு சொகுசு பஸ் : இலங்கை அமைச்சரின் அட்டகாசம்!

  • July 27, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்று (26.07) குன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது அமைச்சருக்கு சொந்தமான செல்ல நாய் மற்றும் பேருந்தின் சாரதி மாத்திரமே அங்கு இருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். விபத்தில் பேருந்து சேதமடைந்துள்ள போதிலும், சாரதிக்கோ நாய்க்குட்டிக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். நாய்க்குட்டியின் சுகவீனத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்து  சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் விபத்து […]

மத்திய கிழக்கு

சூடான் கலவரம்: துணை ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி

  • July 27, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு கலவரத்தில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கில் படுகாயம் அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் தலைநகர் கார்டூமிற்கு மேற்கே ஒம்துர்மன் நகரில் ராணுவ தளத்தின் முகாம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது துணை ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இது திசைமாறி அருகே உள்ள […]

இலங்கை

சர்ச்சைகளுக்கு மத்தியில் வேலனை மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக கடமையேற்ற கஸ்ரன் றோய்

  • July 27, 2023
  • 0 Comments

சர்ச்சைகளுக்கு மத்தியில் , வேலணை மத்திய கல்லூரி அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை நேற்றைய தினம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பாடசாலையின் பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர், பாடசாலைக்கு அதிபராக வேற்று மதத்தை சார்ந்தவரை நியமிக்காதே என கடந்த வாரம் போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தனர். அதனை அடுத்து குறித்த விடயம் பேசுபொருளாகி இருந்தது. மத வாதங்களை முன் வைக்காதீர்கள் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் , பாடசாலையின் பாரம்பரியத்தை மீறி அதிபர் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 245 பெண்களிடம் அத்துமீறல்கள்… வைத்தியருக்கு 20 ஆண்டுகள் சிறை!

  • July 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன் (64) கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்களில் பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் அவரது பாலியல் லீலைகள் வெளிவரத் தொடங்கின. கடந்த 2017ம் ஆண்டு பல பெண்கள், தாங்கள் ராபர்ட் ஹேடனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக குற்றம்சாட்டினர்.அவர்களில் சிலர் […]

பொழுதுபோக்கு

‘கங்குவா’… தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்

  • July 27, 2023
  • 0 Comments

‘கங்குவா‘ படத்தை இரண்டு சர்வதேச மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக ‘கங்குவா’ மாறியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மாஸாக நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி […]

பொழுதுபோக்கு

“உலகின் 5வது மிகப்பெரிய வைரம்” உண்மையை போட்டுடைத்த தமன்னா…

  • July 27, 2023
  • 0 Comments

தனது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் குறித்து நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் அப்படத்திலிருந்து தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியான ‘காவாலா’ நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’, ஜீ கர்தா […]

இலங்கை

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை வரும் பிரான்ஸ் ஜனாதிபதி

  • July 27, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தனது பப்புவா நியூ கினியா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது பார்க்கப்படுகின்றது.

இலங்கை

இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு கடுமையாகும் சட்டம்

  • July 27, 2023
  • 0 Comments

இலங்கையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ், 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இதற்கிடையில், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே அபராதம் அறவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கான அனைத்து பரிவர்த்தனைகளையும் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புதிதாக 40,000க்கும் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை

  • July 27, 2023
  • 0 Comments

McDonald’s உணவகச் சங்கிலி அடுத்த 03 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட புதிய உணவகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள உணவகங்களும் மேம்படுத்தப்படும். இந்த முழு திட்டத்திற்கும் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். 1990களுக்குப் பிறகு எந்த நாட்டிலும் மெக்டொனால்டு உணவகச் சங்கிலியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டம் இதுவாகும் என்று கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் செயல்படும் மெக்டொனால்டு உணவகங்களின் எண்ணிக்கை 1,100ஐத் தாண்டும் என்று […]