இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்க அழைப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 2500 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு நீதி கோரி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை 28.07) நடைபெறவுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வுகளில் இருந்து வெளிபடும் எச்சங்கள் எங்கள் உறவுகளுடையதா என்ற கேள்வி எழுவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டி வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கை அரசை பொறுப்புக்கூற வைக்கவேண்டி இடம்பெறவுள்ள இந்த போராட்டத்தில் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த மக்களையும் ஒன்றுக்கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்