இலங்கை

நாய்க்கு சொகுசு பஸ் : இலங்கை அமைச்சரின் அட்டகாசம்!

அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்று (26.07) குன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது அமைச்சருக்கு சொந்தமான செல்ல நாய் மற்றும் பேருந்தின் சாரதி மாத்திரமே அங்கு இருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் பேருந்து சேதமடைந்துள்ள போதிலும், சாரதிக்கோ நாய்க்குட்டிக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

நாய்க்குட்டியின் சுகவீனத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்து  சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

செல்ல நாய்க்குட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த பேருந்து அமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரிடம் பல செல்ல நாய்கள் இருப்பதாகவும் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்