ஐரோப்பா

ஹிஜாப் அணியாமல் தொடரில் பங்கேற்ற ஈரானிய செஸ் வீராங்கனை: குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்

  • July 27, 2023
  • 0 Comments

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்ட ஈரானிய பெண்ணுக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் கஜகஸ்தானில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் சாரா காடெம் என்று அழைக்கப்படும் 26 வயதான சரசதத் கதேமல்ஷாரி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.இது ஈரானின் இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறி விட்டதாக தெரிவித்து அந்நாட்டு செஸ் கூட்டமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்தது. […]

இலங்கை

வசந்த முதலிகே உட்பட இருவர் கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகேஉட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து குருந்துவத்தை பொலிஸார், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகேயை இன்று (27) கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

  • July 27, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பூரண ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேவேளை இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் இதுகால வரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விவகாரங்கள் பூசி மெழுகப்பட்டு, காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமின்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டமையே வரலாறு. இதேபோன்று மேற்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திலும் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதோடு, […]

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான காலணி மற்றும் பையின் விலை வீழ்ச்சி!

  • July 27, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளின் விலையை 10 சதவீதத்தால், குறைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை காலணிகள் மற்றும் பைகள் உற்பத்தியாளர்களுடன் இன்று (27.07) நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்த நிலையில்,  இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த தொழில் அதிபர்கள், தற்போது சந்தையில் உள்ள பங்குகளும் புதிய விலை திருத்தத்தின் கீழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.  

ஆசியா

வரலாறு காண வீழ்ச்சியில் சீன நுகர்வோர் சந்தை..ஆனால் ஆணுறை விற்பனை உயர்வு!

  • July 27, 2023
  • 0 Comments

சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு திணறி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில் முன்னணி வகிக்கும் யுனிலீவர் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் சொத்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவால், அந்நாட்டின் நுகர்வோர் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத வகையில் மிக குறைவாக காணப்படுகிறது என தெரிவித்து உள்ளது. எனினும், சீனாவின் […]

உலகம்

கம்போடியா பிரதமர் பதவியில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்?

தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆளும் கட்சியான கம்போடிய மக்கள் கட்சியும் தேர்தலில் பங்கேற்றது.அதற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைந்தன. 125 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கம்போடிய மக்கள் கட்சி 120 இடங்களைக் கைப்பற்றியது. இதன்படி மொத்த வாக்குகளில் 96 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இதன் பின்னர், ஆசிய நாடுகளில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த ஹுன் சென் (வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் […]

இலங்கை உலகம்

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

  • July 27, 2023
  • 0 Comments

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கோதுமை ஏற்மதி தடைப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் கோதுமை மாவிற்கான பற்றாக்குறை எழுந்துள்ளது. இதன்நிமித்தம் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையிலும் கோதுமை மாவின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உலகம்

தடை செய்யப்பட்ட ஏவுகணைகள்! ரஷ்யாவிடம் வெளிப்படுத்திய வடகொரியா

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கண்காட்சி ஒன்றில் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரிடம் பெருமையுடன் காட்டியுள்ளார். அண்டை நாடுகளான வடகொரியாவும் ரஷ்யாவும் வியாழக்கிழமை உறவை வலுப்படுத்த உறுதி தெரிவித்ததாகவும் வடகொரிய அரசாங்க ஊடகம் தெரிவித்தது. வடகொரியாவில் ‘வெற்றி நாளாக’ கொண்டாடப்படும் கொரியப் போரின் 70வது ஆண்டு நிறைவையொட்டி ரஷ்ய அமைச்சர் செர்கெய் ஷோய்குவும் சீனாவின் உச்ச ஆட்சி மன்ற உறுப்பினரும் இவ்வாரம் வடகொரியாவுக்கு வந்திருந்தனர். அப்போதுதான் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை   கிம் ஜோங் […]

இந்தியா

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளும் மோடி அரசு!

  • July 27, 2023
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவிக்கும்படி எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரமும் இந்த விடயத்தில் மோடி மௌனம் காப்பதாக கூறி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார். மோடி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் கடந்த மே மாதம் […]

இலங்கை

கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று (26) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டின் பின்புறம் சுமார் 2 அடி உயரத்தில் இருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல […]