முல்லைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்வுக்கான பணிகள்! பாதீடு விரைவில் சமர்ப்பிப்பு
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான பாதீடு எதிர்வரும் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த பாதீடு ஆராயப்பட்டு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள அமைப்பதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டது. நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கிய உத்தரவையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஆர்.பிரதீபன் தலைமையிலான குழுவினர் மேற்படி பகுதிக்கு இன்று கள விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, தொல்பொருள் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் […]













