இலங்கை

ஜனாதிபதி வழங்கிய 3 புதிய நியமனங்கள்!

சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த் பத்திரன, சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி குலசேன ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பொழுதுபோக்கு

ரோலக்சுக்கு போட்டியாக வந்த ஹரால்ட் தாஸ்.. லியோ கொடுத்த சப்ரைஸ்

  • August 15, 2023
  • 0 Comments

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அசத்தலான அப்டேட் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் ஹரால்ட் தாஸ் வரப்போகிறார் என்று வெளியான அறிவிப்பை பார்த்ததுமே ரசிகர்கள் குஷியானார்கள். ஏனென்றால் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்த நாளான இன்று அவருக்கான சர்ப்ரைஸ் ஒன்று வீடியோவாக வெளிவரும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அதாவது சமீபத்தில் சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு லியோ பட குழு […]

பொழுதுபோக்கு

கவனம் ஈர்க்கும் லியோ திரைப்படம் – வீடியோ வெளியீடு!

  • August 15, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காட்சியில் நடிகர் அர்ஜுனின் கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லியோ திரைப்படம் வரும் ஒக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இலங்கை

12 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

கரவனெல்ல, தெஹியதகண்டிய, மஹாஓயா மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள், 274 விசேட வைத்தியர்கள் மற்றும் 23 அவசர சிகிச்சை நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னைக்கு அரசு உடனடித் தீர்வு காணத பட்சத்தில் சுகாதாரத் துறையே கடும் வீழ்ச்சியைச் […]

ஐரோப்பா

வட்டி விகிதங்களை உயர்த்தும் ரஷ்ய மத்திய வங்கி!

  • August 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் மத்திய வங்கி இன்று (08.15) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. உக்ரைனுடனான போரின் தொடக்கத்தில் இருந்து நாட்டின் நாணயம் அதன் குறைந்த மதிப்பை அடைந்த பிறகு பணவீக்கத்தை எதிர்த்துப் போராடவும் ரூபிளை வலுப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு அவசர நடவடிக்கை இது எனக் கூறப்பட்டுள்ளது. மாஸ்கோ இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதாலும், மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் எரிசக்தி ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது. காலப்போக்கில் பொருளாதாரத் தடைகள் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை அழிக்கும் […]

பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சனை அணுகிய கமல்ஹாசன்! என்ன காரணம்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளதோடு, நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது. பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ரஜினி மற்றும் ‘ஜெயிலர்’ குழுவை பாராட்டி வருகின்றனர், மேலும் சமீபத்திய தகவல்களின்படி உலகநாயகன் கமல்ஹாசனும் அதையே செய்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் கமல் ரிஷிகேஷில் இருக்கும் ரஜினியை போனில் தொடர்பு கொண்டு மாபெரும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. […]

இலங்கை

மனுஷ- ஹரின் மீது உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுத்தாக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். தங்களுடைய கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டமை மற்றும் தம்மை பாராளுமன்றிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம், அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்ததையடுத்து கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய […]

ஐரோப்பா

ரஷ்யாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 35பேர் பலி!

  • August 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 35பேர் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை இரவு மகாச்கலா பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த எரிபொருள் நிரம்பு நிலையத்திற்கும் பரவியது. இதில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 6ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு தீ பரவியது. இவ் விபத்தில் 5பேர் உயிரிழந்ததோடு,115க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 200க்கும் மேற்பட்ட வீர்ர்கள் போராடி […]

உலகம்

எத்தியோப்பியாவில் ட்ரோன் தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு; அவசர நிலை அறிவித்த அரசு!

எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் ஃபானோ எனப்படும் அம்ஹாரா போராளிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடித்தும், தாக்குதல் நடத்தியும் வருவதாக ராணுவம் குற்றம்சாட்டுகிறது. கடந்த நான்கு மாதங்களாக போராளி குழுவுக்கும், ராணுவத்துக்கும் மத்தியில் தாக்குதல் தொடர்கிறது. இந்த நிலையில், எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாநிலத்தின் ஃபினோட் செலாத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 26 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ஃபினோட் செலாம் […]

இலங்கை

யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திரதின கொண்டாட்டங்கள்

  • August 15, 2023
  • 0 Comments

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார். இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார். இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் […]